search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரோ விஞ்ஞானிகள்"

    • அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மைய இயக்குனராக விஞ்ஞானி நிலேஷ் தேசாய், பெங்களூருவில் யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மைய இயக்குனராக விஞ்ஞானி சங்கரன் பணியாற்றி வருகின்றனர்.
    • ஓய்வு பெற இருக்கும் இந்த 8 விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனராக விஞ்ஞானி ராஜராஜன், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்து அமைப்பு மைய இயக்குனர் விஞ்ஞானி நாராயணன், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மைய இயக்குனராக விஞ்ஞானி நிலேஷ் தேசாய், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மைய இயக்குனராக விஞ்ஞானி சங்கரன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    அதேபோல், பெங்களூருவில் உள்ள மனித விண்வெளி விமான மைய இயக்குனர் விஞ்ஞானி மோகன், திருவனந்தபுரத்தில் இஸ்ரோ இன்டர்ஷியல் சிஸ்டம்ஸ் யூனிட் என்ற மையத்தின் இயக்குனராக விஞ்ஞானி பத்மகுமார் மற்றும் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் இஸ்ரோவின் ஏ.டி.ஆர்.ஐ.என். என்ற ஆய்வு கூடத்தில் விஞ்ஞானியாக ராதா தேவி மற்றும் சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட 'ஆதித்யா எல்-1' விண்கலத்தின் திட்ட இயக்குனர் விஞ்ஞானி நிகர் ஷாஜி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுடைய பணி காலம் இம்மாதம் (ஏப்ரல்), மே மற்றும் ஜூன் மாத்துடன் நிறைவு பெறுகிறது. ஓய்வு பெற இருக்கும் இந்த 8 விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    • தமிழனாக பிறந்த பெருமையை இன்று அடைந்துள்ளேன். இந்த மேடையில் நிற்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.
    • திண்ணை பள்ளியில் படித்து விண்ணை தொட்டவர் மயில்சாமி அண்ணாதுரை.

    சென்னை:

    சென்னை கோட்டூர்புரத்தில் 'ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்' என்ற தலைப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

    இந்த நாட்டில் ஏன் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன் உருவாகவில்லை என அப்போது கேட்டவர் அண்ணா. அதனால், அவர் பெயரிலான இந்த அரங்கில், விஞ்ஞானிகளான உங்களை அழைத்து பாராட்டுவதே சிறந்தது.

    தமிழனாக பிறந்த பெருமையை இன்று அடைந்துள்ளேன். இந்த மேடையில் நிற்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.

    இஸ்ரோ விஞ்ஞானிகள் சிவன், மயில்சாமி அண்ணாதுரை பிறந்த மண் தமிழ்நாடு. விஞ்ஞானி வீரமுத்துவேலின் பணி பெருமைக்குரியது. திண்ணை பள்ளியில் படித்து விண்ணை தொட்டவர் மயில்சாமி அண்ணாதுரை.

    ஆகஸ்ட் 23 உலகத்திற்கே முக்கியமான நாள்.

    உலகத்தையே வியக்க வைத்த விஞ்ஞானிகள் தமிழ்நாட்டில் உள்ளனர்.

    இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு அறிவியல் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் தலைமையில் நடைபெற்றது.
    • விண்கலங்கள் மூலம் விண்வெளிக்குச் செல்லும் நிகழ்வு போன்ற வற்றினை புரொஜெக்டர் திரையின் மூலம் மாணவிகளுக்கு தெளிவாக விளக்கி கூறப்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு அறிவியல் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் விஞ்ஞானி களான வேல்முருகன் மற்றும் பேராசிரியர் காளிமுத்து ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி வேல்முருகன் கூறியதாவது, சமீபத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியால் (இஸ்ரோ) சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதனைச் சாதித்த முதல் நாடு என்ற பெருமையை நமது நாடு கொண்டாடி வருகின்றது.

    விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் நிலவில் இரும்பு, அலுமினியம், சல்பர் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்தது.

    மேலும் புவி மேற்பரப்பில் உள்ள வளிமண்டலங்கள், கோள்கள், குறுங்கோள்கள், நட்சத்திரங்கள், பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பு, விண்வெளி பாதை, விண்கலங்கள் மூலம் விண்வெளிக்குச் செல்லும் நிகழ்வு போன்ற வற்றினை புரொஜெக்டர் திரையின் மூலம் மாணவிகளுக்கு தெளிவாக விளக்கி கூறினார்.

    மேலும் இடையிடையே மாணவிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. கேள்வி களுக்கு உற்சாகத்துடன் பதில் அளித்த மாணவி களுக்கு உடனுக்குடன் பரிசுகளும் வழங்கப்பட்டது.

    மேலும் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சோழியப்ப கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானியான பேராசிரியர் காளிமுத்து அவர்கள் கூறுகையில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் திறம்பட படித்து விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும், எந்த துறை சார்ந்து எடுத்து படித்தாலும், திறம்பட கற்க வேண்டும். அறிவியல் உலகத்தில் அறிவு சார்ந்த மாணவிகளாக விளங்க வேண்டும், கற்பதை தெளி வாக புரிந்து கற்றல் வேண்டும் என மாணவி களுக்கு அறிவுரை கூறினார்.

    தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி நன்றி உரையாற்றினார். ஆசிரியர் பாண்டியராஜன் நிகழ்ச்சியை ஒருங்கிணை த்தார். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தற்போது தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு நாளை கிரீஸ் நாட்டுக்கு செல்கிறார்.
    • கடந்த 9 ஆண்டுகளில் எங்களின் தொடர் முயற்சியின் பலனாக இந்தியா 5-வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.

    பெங்களூரு:

    நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண் கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த நிகழ்வை தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி அங்கிருந்து காணொலி முலம் பார்த்தார். லேண்டர் நிலவில் தரையிறங்கியதும், தேசிய கொடியை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    பின்னர், காணொலி வாயிலாக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டும், வாழ்த்து தெரிவித்தும் பேசினார். இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை போனில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    தற்போது தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு நாளை கிரீஸ் நாட்டுக்கு செல்கிறார். அன்றே அவர் இந்தியா திரும்புகிறார்.

    நாடு திரும்பியவுடன் பிரதமர் மோடி, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு சந்திரயான்-3 திட்ட வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளை சந்திக்கிறார். இந்தியா சரித்திர சாதனை படைக்க பணியாற்றிய விஞ்ஞானிகளை பாராட்டுகிறார்.

    இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த ஜி-20 வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவை 3-வது பெரிய உலக பொருளாதாரமாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம். கொள்கை ஸ்திரத்தன்மையை கொண்டு வந்து உள்ளோம். அன்னிய நேரடி முதலீட்டை தாராள மயமாக்கி உள்ளோம்.

    போட்டித்திறன், மேம்பட்ட வெளிப்படைத் தன்மை, விரிவாக்கப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல், புதுமைகளை ஊக்குவித்து உள்ளோம். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 60 முதல் 70 சதவீத வேலை வாய்ப்பை கொண்டுள்ளது. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்தை பங்களிக்கிறது. அவர்களுக்கு நமது தொடர்ச்சியான ஆதரவு தேவையாகும்.

    வர்த்தகம் மற்றும் உலக மயமாக்கல் கோடிக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தில் உலக ளாவிய நம்பிக்கையை காண்கிறோம். கடந்த 9 ஆண்டுகளில் எங்களின் தொடர் முயற்சியின் பல னாக இந்தியா 5-வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×